உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு கிலோ கறிவேப்பிலை ரூ.40க்கு விற்பனை

ஒரு கிலோ கறிவேப்பிலை ரூ.40க்கு விற்பனை

மேட்டுப்பாளையம், ; கறிவேப்பிலை ஒரு கிலோ, 40 ரூபாய்க்கு அறுவடை செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பனிக்காலம் துவங்கியதை அடுத்து, மேலும் விலை உயர வாய்ப்புள்ளது என, விவசாயிகள் தெரிவித்தனர். காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், 3000 ஏக்கருக்கு மேல் கறிவேப்பிலை பயிர் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை ஒரு கிலோ, 30 லிருந்து, 35 ரூபாய்க்கு வியாபாரிகள், தோட்டத்தில் கொள்முதல் செய்தனர். இந்த வாரம் ஒரு கிலோ, 40 லிருந்து, 45 ரூபாய் வரை, கிலோவுக்கு, 10 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வீசிய புயல் மற்றும் மழையால், ஆந்திராவில் கறிவேப்பிலை மகசூல் பாதிப்படைந்துள்ளது. ஆத்தூரிலும், கறிவேப்பிலை மகசூல் குறைந்துள்ளது. இதனால் காரமடை, சிறுமுகை இலைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. வருகிற பிப்ரவரி மாதம் வரை, பனி காலம் இருக்கும் என்பதால், விலை உயர்வாக இருக்குமே தவிர, குறைய வாய்ப்பில்லை. மேலும் இப்பகுதியில் விளையும் முதல் தரமான கறிவேப்பிலை கொச்சிக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து விமானத்தின் வாயிலாக, வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தினமும் காரமடையில் இருந்து, 50 டன் கறிவேப்பிலை அனுப்பப்படுகிறது என்கின்றனர் விவசாயிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை