உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

போத்தனூர்;மதுக்கரை ஏ.சி.சி., குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக, மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ரயில்வே பாலத்தின் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். மதுக்கரை கடை வீதியை சேர்ந்த ஈஸ்வரன், 25; வெல்டர் என்பதும், விற்பனைக்காக, 1.1 கிலோ கிராம் கஞ்சா வைத்திருப்பதும் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஈஸ்வரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை