| ADDED : ஏப் 27, 2024 12:56 AM
கோவை;பெரியநாயக்கன்பாளையம், யுனைடெட் கல்வி நிறுவனங்களின் அங்கமான, யுனைடெட் மருந்தியல் கல்லுாரியில், 'மருந்து வேதியல் துறையின் புதிய அணுகுமுறை' என்ற தேசியக் கருத்தரங்கு நடந்தது.புதுச்சேரி அன்னை தெரசா முதுநிலை ஆராய்ச்சி மற்றும் மருந்துகள் கல்லுாரி பேராசிரியர் கவிமணி மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை முதுநிலை பேராசிரியர் சுரேஷ், ஊட்டி ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி டாக்டர் கவுதம ராஜன், ராமகிருஷ்ணா பார்மசி கல்லுாரி துறை தலைவர் ஸ்ரீராம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.வயது மற்றும் உடலின் எடைக்கேற்ப மருந்துகளை உட்கொண்டு, மருந்துகளின் வீரியத்தை குறைப்பதன் மூலம், விலையில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. யுனைடெட் பார்மசி கல்லுாரியின் முதல்வர் அழகர்ராஜா, பேராசிரியர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பார்மசி கல்லுாரிகளில் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.