உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒற்றை யானை உலா; ஆழியாறில் அலர்ட்

ஒற்றை யானை உலா; ஆழியாறில் அலர்ட்

ஆனைமலை : ஆனைமலை அருகே ஒற்றை யானை வலம் வருவதால் சுற்றுலா பயணியர் அச்சமடைந்துள்ளனர்.ஆனைமலை அருகே, ஆழியாறு வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. அணைப்பகுதிக்கு மாலை நேரங்களில் காட்டு யானைகள் குடிநீர் குடிக்க வலம் வருவது வழக்கம்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை ஆழியாறு அணை, ஜீரோ பாயின்ட், நவமலை ரோடு பகுதிகளில் வலம் வருகிறது. இந்த யானை, நேற்று ஆழியாறு பகுதியில் வலம் வந்தது.அப்போது, அங்கு கட்டப்படும் பி.ஏ.பி., நினைவு மண்டபத்தின் சுற்றுச்சுவர் மற்றும் தள்ளுவண்டி கடைகளை சேதப்படுத்தி, அதில் இருந்த பழங்களை சாப்பிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.ஒற்றை காட்டு யானை வலம் வருவதால் வனத்துறை அதிகாரிகள், சுற்றுலா பயணியரை பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை