உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லங்கா கார்னரில் மழை தண்ணீர் தேக்கத்துக்கு கிடைத்தது தீர்வு! ப்ரீகாஸ்ட் வடிகால் பணிகள் ஓவர்

லங்கா கார்னரில் மழை தண்ணீர் தேக்கத்துக்கு கிடைத்தது தீர்வு! ப்ரீகாஸ்ட் வடிகால் பணிகள் ஓவர்

கோவை';லங்கா கார்னரில் மழை நீர் தேக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, 'ப்ரீகாஸ்ட்' தொழில்நுட்பத்தில், 11 மீட்டர் நீளத்துக்கு, மழைநீர் வடிகால் பணி முடிவடைந்துள்ளது.கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக, நல்ல மழை பெய்து வருகிறது. மழை காலங்களில் பொதுவாக லங்கா கார்னர் ரயில்வே பாலம், அவிநாசி ரோடு மேம்பாலம், கிக்கானி பள்ளி அருகே ரயில்வே பாலம் உள்ளிட்ட தாழ்வான இடங்களில், மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகளை திணறடிக்கிறது.குறிப்பாக, லங்கா கார்னரில் சிறிது நேரம் மழை பெய்தாலே ஸ்டேட் பாங்க் ரோடு, கூட்ஷெட் ரோடு வழியாக வரும் தண்ணீரால் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. வாகனங்கள் சிக்கிக்கொள்வதும், மின் விபத்து போன்றவற்றால் உயிரிழப்பும் ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, லங்கா கார்னர் பாலத்தின் மேற்கே, டவுன்ஹால் செல்லும் ரோட்டின் குறுக்கே, 'ப்ரீகாஸ்ட்' தொழில்நுட்பத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கடந்த, 20ம் தேதி இரவு துவங்கியது. கான்கிரீட் கலவை கொண்டு தயாரிக்கப்பட்ட ரெடிமேடு கட்டமைப்பு பொருத்த குழி தோண்டப்பட்டது.ரோட்டின் குறுக்கே, 11 மீட்டர் நீளம், 1.60 மீட்டர் அகலத்துக்கு ஒரு நாளில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, மழைநீர் வடிகால் பணிகளால், தண்ணீர் தேக்கத்துக்கு ஓரளவு தீர்வு கிடைத்துள்ளது.அதேசமயம், சுற்றுப்பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்தினால், மழைக்கால பாதிப்புகளுக்கு, நிரந்தர தீர்வு காண முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை