உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தாயின் பெயரில் ஒரு மரம் பள்ளியில் மரக்கன்று நடு விழா

தாயின் பெயரில் ஒரு மரம் பள்ளியில் மரக்கன்று நடு விழா

கோவை:ஆர்.எஸ்.புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் சார்பில், 'தாயின் பெயரில் ஒரு மரம்' திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, 'தாயின் பெயரில் ஒரு மரம்' இயக்கத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அனைவரும் தங்களது தாயின் பெயரில் ஒரு மரக்கன்றை நடும்படி, பிரதமர் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.இதன் ஒருபகுதியாக, கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின், சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் சார்பாக, வனவிழா, ஆர்.எஸ்.புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.தாயின் பெயரில் ஒரு மரம் இயக்கம் குறித்து, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்நிகழ்ச்சியை, 'இகோ கிளப்' ஆராய்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர் யசோதா துவக்கி வைத்தார். வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன தலைமை விஞ்ஞானி ரேகா வாரியர், மரம் மற்றும் காடுகளின் நன்மை; சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வன மகோத்சவத்தின் பங்கு குறித்து பேசினார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில், உள்நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.தலைமை ஆசிரியர் ஜான் பாத்திமா ராஜ், இகோ கிளப் ஒருங்கிணைப்பாளர் தெரசா, ஆசிரியர்கள் மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை