உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாட்டு வியாபாரிகளிடம் அ.தி.மு.க.,வினர் வசூல்! டி.எஸ்.பி.,யிடம் மனு கொடுத்து வலியுறுத்தல்

மாட்டு வியாபாரிகளிடம் அ.தி.மு.க.,வினர் வசூல்! டி.எஸ்.பி.,யிடம் மனு கொடுத்து வலியுறுத்தல்

பொள்ளாச்சி : 'மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தி அ.தி.மு.க.,வினர் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்,' என, தமிழ்நாடு மாட்டு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தினர், டி.எஸ்.பி.,யிடம் மனு கொடுத்து வலியுறுத்தினர்.பொள்ளாச்சி மாட்டு சந்தையில் தமிழ்நாடு மாட்டு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.அதில், மாட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு இறந்த வியாபாரிகளின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கேரளா வயநாட்டில் நிலச்சரிவில் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.பொள்ளாச்சி மாட்டு சந்தை விரிவாக்கத்துக்கு ஏழு கோடி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஒப்பந்தம் எடுத்த நபர்கள், ஆறு மாதங்களுக்கு மேலாகியும் பணிகளை ஆமை வேகத்தில் செய்வதால் சந்தையில் இட நெருக்கடி ஏற்பட்டு வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வரும் செப்., 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. மாட்டு வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தருகிறேன் என்ற போர்வையில், லாரிகளில் பணம் பறிக்கும் கும்பலை இந்த சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.போலீசார், கவனம் செலுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, டி.எஸ்.பி., ஜெயச்சந்திரனை சந்தித்து, மாட்டு வியாபாரிகள் மனு கொடுத்து வலியுறுத்தினர்.தமிழ்நாடு மாட்டு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் செல்வராஜ் கூறியதாவது:பொள்ளாச்சிக்கு வரும் மாட்டு வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தருகிறேன் என்ற போர்வையில், அ.தி.மு.க.,வினர் மாட்டு வண்டிகளை வழிமறித்து, பூசாரிப்பட்டியில் நிறுத்தி பணம் வசூலிக்கின்றனர்.வெளியூராக இருந்தால், 10 ஆயிரம் ரூபாயும், உள்ளூராக இருந்தால், 1,000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. பணம் கொடுக்காவிட்டால் மாடுகளை கோசாலைக்கு கொண்டு செல்லப்படும் என மிரட்டும் தோணியில் பேசுகின்றனர்.இதனால், மாட்டு வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.எஸ்.பி.,யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை