உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிலக்கடலை விதைப்பண்ணையில் ஆய்வு: விதைச்சான்று உதவி இயக்குநர் அறிவுரை

நிலக்கடலை விதைப்பண்ணையில் ஆய்வு: விதைச்சான்று உதவி இயக்குநர் அறிவுரை

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, கூளநாயக்கன்பட்டியில் நிலக்கடலை விதைப்பண்ணையை, கோவை விதைச்சான்று மற்றும் உரிமச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு செய்தார்.நிலக்கடலையில் விவசாயிகள் அதிகமாக விரும்பி பயிரிடப்படும், 'கத்ரி லேபாக் ஷி' ஆதார நிலை இரண்டு விதைப்பண்ணை அமைக்கப்பட்டு இருந்தது. நிலக்கடலை விதைப்பண்ணை, பூக்கும் பருவத்திலும், துாய முதிர்வு பருவத்திலும் ஆய்வு செய்யப்பட்டது.கோவை விதைச்சான்று மற்றும் உரிமச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:தரமான விதை உற்பத்திக்கு, அதே ரகம் மற்றும் பிற ரகப்பிரிவில் இருந்து வயலை சுற்றி, 3 மீட்டர் இடைவெளி கடைப்பிடித்தல் வேண்டும். இதனால், பயிரின் இனத்துாய்மை பாதுகாக்கப்படும். பிற ரக கலவன், 0.02 சதவீதம் மட்டுமே இருக்க அனுமதி வழங்கப்படுகிறது.'கத்திரி லேபாக் ஷி' என்ற ரகம் காய் பெரியதாகவம், மூக்கு கூர்மையாகவும், காய் சற்று வளைந்து காணப்படும்.கே - 1812 ரகம் குட்டையாகவும், அடர் பச்சை நிறத்தில் அதன் செடி காணப்படும். 2020ம் ஆண்டு வெளி வந்த இந்த ரகம், 51 சதவீதம் எண்ணெய் உள்ளதாகவம், செடிக்கு, 100க்கும் மேற்பட்ட காய் காணப்படும்.இந்த ரகம், 120 முதல், 130 நாள் வாழ்நாள் உடையவையாகும். ஏக்கருக்கு சராசரியாக, 3,500 - 4,500 கிலோ மகசூல் கிடைக்கும். மேலும், உர மேலாண்மையில் ஜிப்சம் இடுதல், 45வது நாளன்று, ஏக்கருக்கு, 160 கிலோ இட வேண்டும். இதனால், மண்ணை இலகுவாக்கி விழுதுகள் இறங்க ஏதுவாக இருக்கும்.அறுவடைக்கு பின், காய்களை சுத்தம் செய்து, கல், மண், இலை, காம்பு மற்றும் பூச்சி நோய் தாக்கிய காய்கள் ஆகியவற்றை நீக்கி உலர வைத்து, விதைக்கு ஏற்ற, ஒன்பது சதவீதம் மிகாமல் ஈரப்பதத்துடன் தர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.பொள்ளாச்சி விதைச்சான்று அலுவலர் நந்தினி, பொள்ளாச்சி தெற்கு வட்டார விதை உதவி அலுவலர் சிவமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ