உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானைகள் நடமாட்டம் குறைக்க முன்னோடி விவசாயிகள் அறிவுரை

யானைகள் நடமாட்டம் குறைக்க முன்னோடி விவசாயிகள் அறிவுரை

பெ.நா.பாளையம்;தேனீக்கள் வளர்ப்பதால், விவசாய நிலத்தில் யானைகள் நடமாட்டம் குறையும் என, முன்னோடி விவசாயிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.தேனீக்கள் வளர்த்தால் பயிர் மகசூல் அதிகரிக்கும். உலகத்தில் உள்ள வெப்ப மண்டல பயிர்களில் மூன்றில் இரண்டு மடங்கு பயிர்களில் தேனீக்கள் வாயிலாக, 20 சதவீதம் மகசூல் அதிகரிக்கிறது. ஏக்கருக்கு ஐந்து இந்திய தேனீ பெட்டிகளை வைப்பதால், அயல் மகரந்த சேர்க்கை வாயிலாக பயிர் மகசூலை, 20 முதல், 80 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.மேலும் ஒரு பெட்டியில் இருந்து ஐந்து முதல்,10 கிலோ வரை தேன் மகசூல் பெறலாம். தென்னை, பாக்கு, வாழை தோட்ட பயிர்களிலும் எலுமிச்சை, மா, தர்பூசணி பழ வகை பயிர்களிலும், காய்கறி பயிர்களான தக்காளி, கத்திரி, முட்டைக்கோஸ், காலிபிளவர், முள்ளங்கி, கொத்தமல்லி, வெள்ளரி, வெங்காயம் மற்றும் சூரியகாந்தி, எள், கடுகு போன்ற எண்ணெய் வித்து பயிர்களிலும், காபி, ஏலக்காய் போன்ற பயிர்களிலும் பூக்கும் தருணம் அறிந்து தேனீக்கள் வளர்த்து பயன் தரலாம். தேனீக்கள் வளர்ப்பதால், யானைகள் நடமாட்டம் குறையும் என, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை