உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 4 மாதங்களுக்குப் பின் ஒன்றிய குழு கூட்டம்

4 மாதங்களுக்குப் பின் ஒன்றிய குழு கூட்டம்

அன்னுார்;அன்னுார் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், லோக்சபா தேர்தல் காரணமாக, கடந்த நான்கு மாதங்களாக நடக்கவில்லை. கடந்த மாதம் 26ம் தேதி கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.கூட்டம் துவங்கியபோது ஒன்றிய அதிகாரிகளுக்கும், ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.ஒத்தி வைக்கப்பட்ட ஒன்றிய குழு கூட்டம், வரும் 11-ம் தேதி (நாளை) காலை 11:00 மணிக்கு நடைபெறும் என, வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கரி தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில், 90 தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி