| ADDED : ஆக 15, 2024 11:48 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, ஆழியாறு கவியருவிக்கு செல்ல வனத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்ததால் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்தனர்.பொள்ளாச்சி அருகே, ஆழியாறு கவியருவி, சுற்றுலாத்தலமாக உள்ளது. விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்து சுற்றுலா பயணியர் குடும்பத்துடன் வருகின்றனர்.தொடர் மழையால், அருவிக்கு நீர் வரத்து அதிகரித்ததால், கடந்த வாரம் சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டது.தற்போது, நீர்வரத்து குறைந்ததால், உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி கவியருவிக்கு செல்ல சுற்றுலா பயணியர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், சுதந்திர தின விடுமுறை நாளில், ஆழியாறு வந்த சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்ந்தனர்.