உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில் வேகம் அதிகரிக்க அனுமதி! செயல்பாட்டுக்கு கொண்டு வலியுறுத்தல்

ரயில் வேகம் அதிகரிக்க அனுமதி! செயல்பாட்டுக்கு கொண்டு வலியுறுத்தல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - கோவை இடையே இயக்கப்படும் ரயில் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது.பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு ரயில் இயக்கப்படுகிறது. மேலும், மதுரை ரயிலும் இவ்வழித்தடத்தில் செல்கிறது.இந்நிலையில், பொள்ளாச்சி - கோவை - பொள்ளாச்சி ரயில் வேகம் அதிகப்படுத்தாததால், பயணியர் சிரமத்துக்குள்ளாகின்றனர். தற்போது, 80 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும் ரயிலை, முதற்கட்டமாக, 100 கி.மீ., அதற்கடுத்து, 110 கி.மீ., வேகத்திலும் ரயில் இயக்க வேண்டும் என, பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்தது.வேகத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதா என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், பொள்ளாச்சி - கோவை செல்லும் ரயில் வேகத்தை அதிகப்படுத்தி தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:பொள்ளாச்சி - கோவை இடையே இயக்கப்படும் ரயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது, ரயில் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.பொள்ளாச்சி - கிணத்துக்கடவு வரை, 90 கி.மீ., வேகத்திலும், கிணத்துக்கடவு - போத்தனுார் இடையே, 100 கி.மீ., வேகத்திலும் ரயில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள், ரயில்வே அட்டவணையில் மாற்றம் செய்து, வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன் வாயிலாக, கோவைக்கு செல்லும் நேரம் குறைவதோடு, ரயிலை அதிகளவு மக்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை