உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நதிநீர் இணைப்பு திட்டம் சாத்தியமாகும்; விவசாயிகளுக்கு அண்ணாமலை உறுதி

நதிநீர் இணைப்பு திட்டம் சாத்தியமாகும்; விவசாயிகளுக்கு அண்ணாமலை உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : கோவையின் வளர்ச்சிக்கு குரல் கொடுக்க ஒரு நல்ல எம்.பி., தேவை, என, கோவை பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.கோவை ஜென்னி கிளப்பில், விவசாயம், தொழிலாளர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் அமைப்புகளுடனான சந்திப்பு, நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில், பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை பேசியதாவது:

பல்வேறு தொழில் செய்வோர், அரசியலுக்கு வராவிட்டாலும் அரசியலில் என்ன நடக்கிறது என்பதை உற்றுநோக்கி வருகின்றனர். இங்கு சந்தித்த பலர், 50 ஆண்டு காலமாக உள்ள கோரிக்கையை வலியுறுத்தி உள்ளீர்கள். இதுவே எங்கள் மீதான நம்பிக்கையை காட்டுகிறது. 1963க்கு பின் தமிழ்நாட்டில் பாசன வசதி நிலம் 14 சதவீதம் சுருங்கியுள்ளது. விவசாயத்துக்கு வர வேண்டிய திட்டங்கள், நன்மைகள் வரவில்லை. மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வரும்போது, நதிநீர் இணைப்பு 2.5 லட்சம் கோடி ரூபாய் செலவில் செய்ய முடியும். ஆனைமலை - நல்லாறு திட்டத்துக்கு, 10,000 கோடி ரூபாய் தேவை. இது போன்ற கோரிக்கைகளை, மத்திய அரசால் மட்டுமே நிறைவேற்ற முடியும்.கோவையில், நொய்யல் ஆற்றை சுத்தம் செய்ய, 970 கோடி ரூபாய் மத்திய அரசு அளித்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்ற நிதி அளித்துள்ளது. இதுவரை கோவையிலிருந்து குரல் கொடுக்க, நல்ல எம்.பி., இல்லை. இந்த குறையும் நிறைவேறும். இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சிக்குப் பின், பா.ஜ., தேர்தல் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Raghuraman Kumaraswami
மார் 28, 2024 14:07

It is Modi matrum Annamalaiyin Guarantee to Kovai industrialists and public


venugopal s
மார் 28, 2024 12:39

எப்படி? கடந்த பத்து ஆண்டுகளில் மத்தியில் ஆண்ட பாஜக அரசு கங்கை, கோதாவரி,காவிரி ஆறுகளை இணைத்தது போலவா?


Rajagopal Mohankumar
மார் 28, 2024 11:24

நதி நீர் இணைப்பு தமிழக விவசாயிகளின் தலைமுறை கனவு கடந்த எடப்பாடியின் அஇஅதிமுக அரசு தென்னிந்திய நதிகளை இணைப்பதாக வாக்குறுதி அளித்தது ஆனால் இணைக்கவில்லை அணைத்து நதிகளையும் படி படியாக இணைத்து தமிழகத்தின் அணைத்து மாவட்டங்களின் விவசாயத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் அண்ணன் திருஅண்ணாமலை அவர்கள் செய்வார் என்று தமிழக இளஞர்கள் நம்புகிறரர்கள் வாக்குறுதி நிறைவேற்றி மக்களின் நீங்க இடம்பிடித்து தங்களது அரசியல் பயணம் வெற்றிபெற வாழ்த்தும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு விவசாயக்குடும்பத்தின் இளைஞன்


Kumar
மார் 28, 2024 07:45

கோவைக்கு நல்ல எம்பி தான் வேண்டும் அண்ணாமலை இல்லை


Kannan Palanisamy
மார் 29, 2024 06:56

நல்ல எம்பி யார்?


Kannan Palanisamy
மார் 29, 2024 06:57

நல்ல எம்பி யார் என்பது மக்களுக்கு தெரியும்


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ