உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜே.சி.டி., கல்லுாரியில் ஆண்டு விழா

ஜே.சி.டி., கல்லுாரியில் ஆண்டு விழா

கோவை:பிச்சனுார், ஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 15ம் ஆண்டு விழா, கல்லுாரி கலையரங்கத்தில் விமர்சையாக நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஜிபிடி சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை இயக்குனர் சத்யபிரகாஷ் சேகரன், '' மாணவர்கள் படிக்கும் போது தொழில் நிறுவனங்களில் பணிபுரிவதற்கு ஏற்ப தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.தொடர்ந்து, சிறந்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். கல்லுாரியின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் மனோகரன் வாசித்தார். ஐ.க்யூ.ஏ.சி., இயக்குனர் அருள் கார்த்திக், அகாடமிக் டீன் கீதா, கணிப்பொறித் துறை தலைவர் ஐஸ்டின் ஜோஸ் மற்றும் துறைதலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !