உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேராயரின் ஆன்மிக பயணம் புத்தகம் வெளியீட்டு விழா

பேராயரின் ஆன்மிக பயணம் புத்தகம் வெளியீட்டு விழா

கோவை;கோவை தென்னிந்திய திருச்சபைகளின் கோவை மறை மாவட்ட பேராயர் திமோத்தி ரவீந்தரின், பேராயர் அனுபவத்தை, பிரசாந்த் அப்புசாமி என்பவர் 'எத்திக்கல் லீடர்ஷிப் இன் தி காரிடோர்ஸ் ஆப் பெய்த்' என்ற புத்தகமாக எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா கோவையில் நடந்தது.புத்தகத்தை பேரூர் ஆதினம் மருதசால அடிகளார் வெளியிட்டார்; கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் பஷீர் அகமது, குருத்வாரா சிங் சபா தலைவர் குர்பிரீத் சிங் பெற்றுக்கொண்டனர்.தாவூதி போரா அஞ்சுமன் இ-புர்ஹானி தலைவர் ஜனாப் ேஷக் மொயிஸ் கத்தவாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தியோத்தி ரவீந்தர் பேசுகையில், ''இந்த ஆன்மிக பயணத்தில் உடன் இருந்த அனைவருக்கும் நன்றி,'' என்றார்.கோவை சி.எஸ்.ஐ., திருமண்டல துணைத் தலைவர் ஆயர் டேவிட் பர்னபாஸ், திருமண்டல செயலாளர் ஆயர் பிரின்ஸ் கால்வின் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை