கோவை, -தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், 2024க்கான ஆன்லைன் முன்பதிவு நடைமுறை துவங்கப்பட்டது.ஆண்டுதோறும் மாநில விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழக முதல்வர் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படும். இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என, பல்வேறு பிரிவினர் பங்கேற்று பரிசுகளை வெல்வர்.நடப்பாண்டு நடத்தப்பட உள்ள போட்டிகளில், பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என, 5 பிரிவுகளில், 27 விளையாட்டுக்கள், 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள், வரும் செப்., மற்றும் அக்., மாதங்களில் நடத்தப்பட உள்ளன.போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விவரம், முன்பதிவு ஆகியவற்றை https://sdat.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக, முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பதிவேற்றம் செய்ய வேண்டும். வரும் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.'ஆடுகளம்' தகவல் தொடர்பு மையத்தை, அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.