உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏல விற்பனை

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏல விற்பனை

அன்னுார்; அன்னுார், சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடைபெற்ற ஏலத்தில் தேங்காய் குறைந்தபட்சமாக ஒரு கிலோ 44 ரூபாய் 20 பைசா முதல், அதிகபட்சமாக 50 ரூபாய் 20 பைசா வரை விற்பனையானது.இது குறித்து விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகர் கூறுகையில், ''வாழைத்தார்கள், தேங்காய், கொப்பரை, பருத்தி உள்ளிட்ட அனைத்து விளை பொருட்களையும் ஏல விற்பனைக்கு கொண்டு வரலாம்.இங்கு தேசிய வேளாண் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளதால் மற்ற இடங்களில் உள்ள விலையையும் தெரிந்து கொள்ளலாம். ஏலத்தில் எதிர்பார்க்கும் விலை கிடைக்காவிட்டால், இங்கு உள்ள கிடங்குகளில் இருப்பு வைத்துக் கொள்ளலாம்.இருப்பு வைக்கும் விளைபொருட்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !