உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புலிகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு

புலிகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு

வால்பாறை;உலக புலிகள் தினத்தை முன்னிட்டு, பழங்குடியின மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.வால்பாறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (நேசம் டிரஸ்ட்) உண்டு உறைவிடப்பள்ளியில், உலக புலிகள் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமை வகித்து பேசும்போது, ''காடுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க புலிகளை பாதுகாக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, ஆனைமலை புலிகள் காப்பகத்தில், 16 புலிகள் உள்ளன.எஸ்டேட் பகுதியில் வசிப்பவர்கள், மாலை, 6:00 மணிக்கு மேல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வனவிலங்குகள் குறித்த தெரிந்து கொள்ள, மாணவர்கள் அதிக அளவில் நுால்களை படிக்க வேண்டும். இயற்கையையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பது நமது கடமையாகும்,'' என்றார்.நிகழ்ச்சியில், பழங்குடியின மாணவர்களுக்கு, நடனம், ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வனத்துறை சார்பில் பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை