உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.ஏ., பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப சிம்போசியம்

பி.ஏ., பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப சிம்போசியம்

பொள்ளாச்சி : பி.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், அறிவியல் மற்றும் மனித பண்பாட்டியல் சங்கம் சார்பில், தேசிய அளவிலான தொழில்நுட்ப சிம்போசியம் நடந்தது. கல்லுாரித் தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.பெங்களூரு சாப்ட்வேர் ஆர்க்கிடெக் முரளி கலந்து கொண்டு, 'கடின உழைப்பு மற்றும் ஆர்வம் வாயிலாக, மாணவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் இலக்கை அடைய முடியும்,' என, அறிவுறுத்தினார்.தொடர்ந்து, பல்வேறு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் இடையே பேப்பர் புராஜெக்ட், பேப்பர் பிரசன்டேஷன், வினாடி - வினா என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவருக்கு பரிசும் வழங்கப்பட்டது. முதலாமாண்டுத் துறைத் தலைவர் யுவராஜா, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி