உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மரத்தில் மோதி விபத்து பைக்கில் சென்றவர் பலி

மரத்தில் மோதி விபத்து பைக்கில் சென்றவர் பலி

பாலக்காடு;பாலக்காடு அருகே, மரத்தில் பைக் மோதி விபத்துக்கு உள்ளானதில், வாலிபர் பலியானார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கிழக்கஞ்சேரி வக்கால பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 27. கூலி வேலை செய்யும் இவர், நேற்று முன்தினம் இரவு பாலக்காடு- - திருச்சூர் தேசிய நெடுஞ்சாலை, அணக்கப்பாறை வழியாக பைக்கில் சென்றார்.அப்போது, திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு ஆலத்தூர் தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால், சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். வடக்கஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ