உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலை மறியல் செய்ய முயன்ற பா.ஜ.,வினர்

சாலை மறியல் செய்ய முயன்ற பா.ஜ.,வினர்

கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து, கோவையில் பா.ஜ.,வினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கலந்து கொள்ள பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பா.ஜ.,வினர் வாகனங்களில் கோவை நோக்கி வந்தனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தடுத்து நிறுத்தி, 7 பெண்கள் உட்பட, 60 பா.ஜ., வினரை கைது செய்து, வீரபாண்டி பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இரவு, 9:25 மணி ஆகியும் அவர்களுக்கு தண்ணீரோ, உணவோ வழங்கப்படவில்லை. வீடுகளுக்கு செல்ல பெண்களையும் அனுமதிக்கவில்லை. இதையடுத்து பா.ஜ.,வினர் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறி, மேட்டுப்பாளையம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில், நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ