கால்வாய் அமைக்கணும்!
பொள்ளாச்சி, ஆச்சிபட்டி ஊராட்சி சங்கம்பாளையம் காலனி, மகாலட்சுமி நகரில் புதிதாக அமைத்த ரோட்டில் கால்வாய் அமைக்காமல் இருப்பதால், மழை நீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதனால் ரோட்டில் பயணிக்க சிரமமாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் கால்வாய் அமைக்க வேண்டும்.-- -முருகன், பொள்ளாச்சி. ரோட்டோரத்தில் 'பார்க்கிங்'
பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், நெகமம் டவுன் பஸ் நிற்கும் இடத்தில் அதிகளவு வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகிறது. இதனால், நாகர் மைதானம் மற்றும் கோவில்பாளையம் செல்லும் வாகனங்கள் இப்பகுதியில் திரும்பி செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -ராஜ்குமார், நெகமம். சாக்கடையில் அடைப்பு
பொள்ளாச்சி, 4வது வார்டு, ஆறுமுகம் நகரில் உள்ள கழிவு நீர் கால்வாயில் மண் மற்றும் குப்பை நிறைந்துள்ளது. இதனால், மழை நீர் கால்வாயில் வெளியேறாமல், வீட்டினுள் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் இதை கவனித்து குப்பை மற்றும் மண்ணை அகற்றம் செய்ய வேண்டும்.-- -பாலசுப்ரமணியம், பொள்ளாச்சி. வீணாகும் தண்ணீர்
பொள்ளாச்சி, சுந்தரம் லே-அவுட், 3வது வீதியில் தண்ணீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதால் நகராட்சி நிர்வாகம் கவனித்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.- -ஷர்ஷினி, பொள்ளாச்சி. ரோடு மோசம்
கிணத்துக்கடவு, முள்ளுப்பாடியில் இருந்து பட்டணம் செல்லும் ரோடு முழுவதும் மோசமாக இருப்பதால், பைக்கில் சென்று வர சிரமமாக உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.-- -கணேஷ், தாமரைக்குளம். வாகனங்களால் இடையூறு
பொள்ளாச்சி, கடைவீதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், மற்ற வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, ரோட்டின் இருபக்கமும் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- சுந்தரம், பொள்ளாச்சி. ரோட்டில் பள்ளம்
தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷன் அருகில், ரோட்டில் கற்கள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, இந்த சேதமான ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க வேண்டும்.- கார்த்திக், உடுமலை. அழகுபடுத்த வேண்டும்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, நகராட்சி சார்பில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ரவுண்டானா பராமரிப்பின்றி, பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே, அங்கு செயற்கை நீரூற்றுகள், பூச்செடிகள் வைத்து அழகுபடுத்த நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கண்ணன், உடுமலை. துார்வார வேண்டும்
உடுமலை, திருப்பூர் ரோடு பிரிவில் சாக்கடை கால்வாய் துார்வாரப்படாமல் உள்ளது. குப்பைக்கழிவுகள் சாக்கடை கால்வாயில் முழுவதும் தேங்கி நிற்பதால், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குவிந்து நிற்கிறது. அப்பகுதியில் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரவி, உடுமலை. சேதமடைந்த ரோடு
உடுமலை ராஜேந்திரா வீதி, கல்பனா ரோடு சந்திப்பு அருகே மழைநீர் வடிகால் அமைப்பதற்கு குழி தோண்டப்பட்டு பணிகளும் நிறைவடைந்துள்ளது. ஆனால் ரோடு மோசமாகியுள்ளது. வடிகால் அமைக்கப்பட்ட பகுதி மட்டுமே் மேடும் பள்ளமுமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி அப்பகுதியில் விபத்துக்குள்ளாகின்றனர்.- செல்வகுமார், உடுமலை. எரியாத தெருவிளக்குகள்
உடுமலை, ஜீவா நகரில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. மாலை நேரங்களில் பொதுமக்கள் வெளியில் சென்று வருவதற்கு பாதுகாப்பில்லாத சூழலாக வீதி இருள் சூழ்ந்துள்ளது. இதனால் திருட்டு பயமும் அப்பகுதியில் அதிகரிக்கிறது. மக்களின் பாதுகாப்பிற்காக தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.- தேவிஸ்ரீ, உடுமலை. சுகாதாரம் பாதிப்பு
உடுமலை பசுபதி வீதியில், குப்பைக்கழிவுகள் குடியிருப்புகளின் அருகில் கொட்டப்படுகின்றன. அப்பகுதியில் சுகாதாரம் முழுவதும் பாதிக்கப்படுகிறது. கழிவுகளால் மிகுதியான துர்நாற்றமும் வீசுகிறது. கழிவுகளில் மழைநீர் தேங்கி நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.- ராஜேஸ்வரி, உடுமலை.