உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் நடந்த ரத்த தான முகாம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் நடந்த ரத்த தான முகாம்

கோவை;உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் நேற்று ரத்த தான முகாம் நடந்தது.ஒவ்வொரு ஆண்டும் ஜூன், 14ம் தேதி உலக ரத்த தான தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முகாமில், 100 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.முகாமில், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி, தலைமை நிர்வாக அதிகாரி ராம் குமார், மருத்துவ இயக்குனர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன் ஆகியோர் முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் அலுவலர்கள் ரத்த தானம் செய்தனர்.ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில், ரத்த தானம் செய்பவர்களுக்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் சிறப்பு சலுகை கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் அவர்கள், சிகிச்சையின் போது சிறப்பு கட்டண சலுகை பெற்றுக்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்