உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பில்லுார் அணையை எந்த தொழில்நுட்பத்தில் துார்வாருவது?

பில்லுார் அணையை எந்த தொழில்நுட்பத்தில் துார்வாருவது?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை பில்லுார் அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை, எந்த தொழில்நுட்பத்தில் துார்வாருவது; வண்டல் மண்ணை எவ்வாறு வெளியேற்றுவது என்பது தொடர்பாக, தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நாளை (13ம் தேதி) நடக்கும் சிறப்பு கூட்டத்தில், இறுதி முடிவெடுக்கப்படுகிறது.கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு, மிக முக்கிய நீராதாரமாக பில்லுார் அணை உள்ளது. இதன் மொத்த உயரம், 100 அடி. இந்த அணை, 1967ல் கட்டப்பட்டது. அதன் பின் ஒருமுறை கூட துார்வாராததால், 45 அடி உயரத்துக்கு வண்டல் மண் படிந்திருக்கிறது. இதன் காரணமாக, பருவ மழை காலங்களில் போதுமான தண்ணீர் தேக்க முடியாமல் ஆற்றில் திறந்து விடப்பட்டது.தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, பில்லுார் அணைக்கு சென்று, நீர் இருப்பு விபரங்களை பார்வையிட்டார். என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை, கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவ குரு பிரபாகரன் ஆகியோர் விளக்கினர்.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''பில்லுார் அணையை துார்வாருவதில், தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. 25 ஆயிரம் கியூபிக் மீட்டர் வண்டல் மண் படிந்திருக்கிறது. 14 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்துவதால், எவ்வளவு வண்டல் மண் எடுக்க முடியும்; எந்த வகையில் துார்வாருவது என்பதை முடிவெடுக்க வேண்டும்,'' என்றார்.கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:'பைலட்' திட்டத்தில், 10 ஆயிரம் கியூபிக் மீட்டர் வண்டல் மண் ஏற்கனவே துார்வாரப்பட்டிருக்கிறது. உலக வங்கி நிதியுதவியுடன், 'டிரெஜிங்' முறையில், 25 ஆயிரம் கியூபிக் மீட்டர் வண்டல் மண் எடுக்க வேண்டும்; இதற்கு தண்ணீர் அதிக தேவை. தண்ணீர் வந்த பிறகே, இந்நடைமுறையில் துார்வார முடியும். வரும் திங்கட்கிழமை (நாளை) பில்லுார் அணை துார்வாருவது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. மின்வாரியம், குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். வண்டல் மண் அதிகமாக படிந்திருக்கிறது; ஏதாவதொரு 'டெக்னாலஜி'யில் கேட் மூலமாக வெளியேற்ற வேண்டும்.எந்த 'டெக்னாலஜி'யை பின்பற்றுவது, வண்டல் மண்ணைவெளியே எடுத்ததும் என்ன செய்வது என்பது தொடர்பாக, இறுதி முடிவெடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு, கலெக்டர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Bharathi
மே 12, 2024 12:12

Seek assistance from golden hair


Svs Yaadum oore
மே 12, 2024 11:06

இந்த அணை, கட்டப்பட்டதாம் அதன் பின் ஒருமுறை கூட துார்வாராததால், அடி உயரத்துக்கு வண்டல் மண் படிந்திருக்கிறதாம் இதன் காரணமாக, பருவ மழை காலங்களில் போதுமான தண்ணீர் தேக்க முடியாமல் ஆற்றில் திறந்து விடப்பட்டதாம் இப்படிப்பட்ட திராவிட மாடல் கேவலத்தை வைத்துக்கொண்டு ஆடி கார் சாமி தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்று வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்து சாமியாட போறானாம் இவனெல்லாம் விவசாயியாம்


ஆரூர் ரங்
மே 12, 2024 10:23

வளர்ந்த நாடுகளில் நன்றாக இருக்கும் அணைகளையும் இடித்துத் தள்ளுகிறார்களாம். ஏரி, கால்வாய், வாய்க்கால் பாசனமே சிறந்தது என்பதை உணரத் துவங்கியுள்ளனர். வண்டல் படிதல்.அதனால் நிலவளம் பாதிப்பு , நிலநடுக்கம் போன்ற பக்க விளைவுகள் அவர்களை மாற்றியுள்ளன.


Kundalakesi
மே 12, 2024 10:13

இது ஒரு மாடல் மழை காலத்தில் தூர்வாருவது பற்றி குடிநீர் மின்சாரம் மாநகராட்சி அலுவலர்கள் நன்றாக அன்னபூர்ணா உணவு உண்டு குறட்டை விட்டு அடுத்த ஆண்டு தூர்வாரலாம்


sethu
மே 12, 2024 10:07

தமிழக அரசின் கஜானாவில் உள்ள பணத்தை தூர் வாரப்போறாங்களா? அங்கு மிச்சம் மீதி பணம் இருக்குதா? அப்பாவுக்கு உலக வங்கியில் கடன் வாங்கியா கோடியில் சிலை வைத்தார், ஈரோட்டு வெங்காயத்திற்கு பல ஆயிரம் கொடியில் ஊர்முழுக்க சிலை வைத்த பணம் உலக வாங்கியா கடன் கொடுத்தது தமிழா வெட்கம் வெட்கம்


Kasimani Baskaran
மே 12, 2024 10:00

சந்தேகம் என்ன திராவிட மாடலில்த்தான் தூர் வாருவார்கள்


S. Gopalakrishnan
மே 12, 2024 09:28

1967-ல் காமராஜர் கட்டிய அட்டையை திராவிட அரசுகள் ஒருமுறை கூட தூர் வாரவில்லை. திராவிட மாடல் வாழ்க !


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 12, 2024 08:50

கருத்துக்களை படிக்கும்போது திராவிட சித்தாந்தம் என்றால் என்ன, எவ்வளவு கேவலமாக, கீழ்த்தரமாக, ஊழலிலும், வன்முறையிலும் சிறந்தது என்று தமிழக மக்கள் நன்கு புரிந்துகொண்டு உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது ஆனால் அந்த திராவிட வண்டல் மண்ணை தமிழகத்தில் இருந்து எப்படி அகற்றுவது என்று தெரியாமல், அந்த சகதியிலேயே தமிழர்கள் உழன்று கொண்டிருப்பதை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது ஆதே சமயம் அந்த சகதியில் மீன் பிடித்து உண்பதில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்பதால் கோபம் வருகிறது


vijay,covai
மே 12, 2024 07:51

இதற்கும் உலக வங்கியில் கடனா, விடியல் ஆட்சியில் நிதி இல்லையா


ஆரூர் ரங்
மே 12, 2024 07:34

கூவம் மணக்க வைத்த அதே வழிதான். (காலத்துக்கேற்றார்போல முதலைக்கு பதில் டைனோசர் ன்னு கதையில் மாற்றம் தேவை)


சமீபத்திய செய்தி