உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முட்டைகோஸ் வரத்து குறைவால் விலை உயர்வு

முட்டைகோஸ் வரத்து குறைவால் விலை உயர்வு

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிற்கு முட்டை கோஸ் வரத்து குறைந்துள்ளதால், கோஸ் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு கர்நாடகா மற்றும் நீலகிரி மாவட்ட விவசாயிகள் கேரட், முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், 'கர்நாடகா மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஈரோடு மாவட்டம் திம்பம், கேர்மாளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் முட்டை கோஸ் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களுக்கும் அதிகம் அனுப்பப்படுகின்றன. பாஸ்ட்புட் கடைகள், ஹோட்டல்களுக்கு அதிக அளவில் தேவைப்படுகிறது. இதனால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.முட்டைகோஸ் வரத்து நாள் ஒன்றுக்கு 20 லோடுகள் தான் வருகிறது. ஒரு லோடு சுமார் 10 முதல் 12 டன் வரை இருக்கும். 40 லோடுகள் வர வேண்டிய நிலையில் 20 லோடுகள் தான் வருகிறது. முட்டை கோஸ் 1 கிலோ ரூ.15 முதல் ரூ. 25 வரை விற்பனை ஆன நிலையில் வரத்து குறைவால் 1 கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை ஆகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை