| ADDED : ஜூன் 12, 2024 10:39 PM
கோவை : தாசில்தார் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில், மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறும்; மக்கள் பங்கேற்று பயனடையலாம்.ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையன்று, கோவையிலுள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களும் செயல்படும். வட்ட வழங்கல் அலுவலங்களில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறும்.அதன்படி வரும் 15 காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை பொதுவினியோகத்திட்ட குறைதீர் சிறப்பு முகாம், அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறும்.இந்த குறைதீர் முகாமில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், குடும்ப அட்டை நகல்,மொபைல்போன் எண் மற்றும் குடும்ப தலைவர் போட்டோ மாற்றம் தொடர்பான குறைகளை, மனுக்களாக வழங்கி மக்கள் பயனடையலாம்.