உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழக மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு காரணமல்ல: அண்ணாமலை

தமிழக மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு காரணமல்ல: அண்ணாமலை

கோவை, : ''உதய் மின் திட்ட ஒப்பந்தத்தில், எங்குமே மின் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென்று மத்திய அரசு சொல்லவில்லை,'' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் அவர் நேற்று அளித்த பேட்டி:

தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல, மாதந்தோறும் மின்சார அளவீட்டைக் கணக்கெடுத்தால் மின் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, 200 யூனிட் பயன்படுத்தினால் மாதக்கட்டணம் 450 ரூபாய்; அதுவே இரு மாதங்களுக்குக் கணக்கிட்டுக் கட்டினால், 400 யூனிட்டுக்கு 1440 ரூபாய். அதாவது மாதந்தோறும் எடுத்தால், இரு மாதங்களுக்கு 900 ரூபாய் செலுத்தினால் போதும்; ஆனால், இரு மாதங்களுக்கு ஒரு முறை எடுக்கும்போது, 1440 ரூபாயாகி, கூடுதலாக 540 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. மின் கட்டண உயர்வுக்கு, உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதையும் காரணமாக ஏற்க முடியாது.வெளிநாட்டு முதலீடு தமிழகத்தில் மிகவும் குறைவு. இந்த ஆண்டில் ரூ.20 ஆயிரத்து 157 கோடி மட்டுமே முதலீடு ஆகியுள்ளது; மகாராஷ்டிராவில் ரூ.ஒரு லட்சத்து 25,101 கோடியும், குஜராத்தில் 60 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலும் வெளிநாட்டு முதலீடு வந்துள்ளது. இதை மறைத்துவிட்டு, மத்திய அரசின் மீது பழி போட, 'இதையெல்லாம் கொடுங்கள்' என்று முதல்வர் 'ட்வீட்' போடுகிறார். உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவது பற்றிப் பேசினால், பா.ஜ., சதித்திட்டம் தீட்டுவதாகச் சொல்வார்கள். இந்தியாவில் பா.ஜ., இவ்வளவு பெரிய வளர்ச்சியை எப்படி எட்டியதோ, அதேபோல தமிழகத்திலும் பா.ஜ., வளரும். லோக்சபா தேர்தலில், 11.5 சதவீதம் ஓட்டுக்களைப் பெற்றிருக்கிறோம். ஆளும்கட்சியே 26 சதவீதம்தான் பெற்றுள்ளது. அதனால் அடுத்த 500 நாட்களில், தனித்து ஆட்சி அமைப்பதற்காக நாங்கள் உழைப்போம். மக்கள் எங்களை ஏற்பார்கள் என்று நம்புகிறோம்.ரசாயனம் கலந்த மதுபானங்களை விற்கும்போது, கள்ளை ஏன் விற்கக்கூடாது என்று, கடந்த 2006ல், அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் நீதிபதி சிவசுப்ரமணியம் அறிக்கை அளித்தார்; அதேபோல, இப்போது ஐகோர்ட் நீதிபதியும், கேள்வி எழுப்பியுள்ளார். இதைத்தான் நாங்களும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். இந்த முறையாவது இதை முதல்வர் ஏற்க வேண்டும்.தமிழகத்தில் ஒரு தமிழ்ப்பல்கலைக்கழகம், ஓர் ஆராய்ச்சி நிறுவனம் மட்டுமே உள்ளதால் நிதி குறைவாகவுள்ளது. தமிழகஅரசு நிலம் கொடுத்தால், தென் மாவட்டத்தில் ஒருபல்கலைக்கழகம் கொண்டு வரத்தயாராகவுள்ளோம்.யார் யாரையோ பா.ஜ., கட்சி என்று சொல்லி, தி.மு.க.,வினர் பட்டியல் வெளியிடுகிறார்கள். நாங்கள் 'தி க்ரைம் முன்னேற்றக்கழகம்' என்று ஆவணத்தை வெளியிடுகிறோம். மொத்தம் 18 பக்கங்கள் உள்ள இந்த ஆவணத்தில், தி.மு.க., நிர்வாகிகள் பெயர், போட்டோ, என்ன குற்றம் செய்துள்ளார், தேதி உள்ளிட்ட விபரங்களைக் குறிப்பிட்டுள்ளோம்.போதைப் பொருள் கடத்தியது, கள்ளச்சாராயத் தொடர்புகள், அரசியல் படுகொலை, வியாபாரிகளிடம் மோசடி என 112 பேருக்கும் மேற்பட்டோர், பெரியளவில் க்ரைம் செய்தவர்கள். அதிலும் இந்த முறை தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின்பு, இந்த குற்றங்களை செய்தவர்கள்.

பட்ஜெட்டில் கோவைக்கு...

கோவை ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி மதிப்பில் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் போல, பல அடுக்குகளில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதை 'பிபிபி' எனப்படும் பொதுமக்கள்-தனியார் பங்களிப்பு திட்டமாக இல்லாமல் 'இபிசி' (EPC-Engineering, procurement and construction) என்ற முறையில், இதை மத்திய அரசே வடிவமைத்து விரிவாக்கம் செய்து தர வேண்டுமென்று, மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதேபோல, முதியோர்க்கான சிறப்பு மருத்துவமனை, கேன்சர் மருத்துவமனை என வெவ்வேறு கோரிக்கைகளையும், துறை சார்ந்த அமைச்சர்களிடம் வலியுறுத்தி வருகிறோம். பெரிய திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் வர வாய்ப்புஉள்ளது. இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.

'மாயமான 22 லட்சம் விவசாயிகள்'

''தமிழகம் முழுவதும் 79 லட்சத்து 38 ஆயிரம் விவசாயிகள் இருக்கிறார்கள்; இவர்களில் பி.எம்.கிசான் திட்டத்தில் பயன் பெறுவதற்கான விவசாயிகள் பட்டியலைத் தயாரிக்க வேண்டியது, தமிழக அரசின் பொறுப்புதான். ஆனால் 2021ல் 43 லட்சமாக இருந்த விவசாயிகள் எண்ணிக்கை, 2024ல் 21 லட்சமாகக் குறைந்துள்ளது. இதில் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது.எனவே உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி, தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென்று, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இது தொடர்பாக, பா.ஜ., விவசாய அணி தகவல் சேகரித்து வருகிறது,'' என்றார் அண்ணாமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

K.n. Dhasarathan
ஜூலை 23, 2024 16:00

அண்ணாமலை எவர்களே ஓரூ சிறு பிள்ளைக்கு கூட தெரியும் விஷயம் உங்களுக்கு தெரியாதா? அல்லது தெரியாதது போல நடிப்பா ? உதய் மின் திட்டம் என்றால் என்ன ? வருட வருடம் விலை மாற்றம் செய்ய சொல்வது யார் ? இல்லை என்றால் மான்யம் கிடையாது, லோன் கிடையாது என்று சொல்வது யார் ? உட்கார்ந்து படிங்க தினம் நுறு பொய் சொல்ல யோசிக்கிறதை விட்டு, படிங்க, விஷயம் தெரிஞ்சு பேசுங்க. சரியா ?


Senthilraj
ஜூலை 23, 2024 15:31

பெட்ரோல் விலை ₹40, சிலிண்டர் விலை பாதி, 2கோடி பேருக்கு வேளை வருடத்திற்கு, நீங்க வாக்குறுதி தரவில்லையா?? பிஜேபி ஆட்சிக்கு வந்ததுக்கு பிறகு தான் எல்லா விலையுமே பறிபோனது.


அரசு
ஜூலை 23, 2024 15:07

இந்த மின்சார கட்டண உயர்வுக்கு காரணம் மத்திய அரசின் உதய் திட்டம் தான் என்பது கூட தெரியாத ஒருவர் மத்தியில் ஆட்சி செய்யும் ஓர் அரசின் மாநிலக் கட்சியின் தலைவர் என்றால் அவமானமாக இருக்கிறது.


ஆரூர் ரங்
ஜூலை 23, 2024 15:45

சோலார் அமைத்தால் கட்டாயமாக லஞ்சம் தரக்கணும்னு உதய் திட்டம் சொல்லவில்லையே? ஆனால் இங்கு அதுதான் நடக்கிறது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள் எல்லாவற்றிலும் சோலார் வைத்தாலே மின் வாரியத்தின் நஷ்டம் காணாமல் போய்விடும்.


R S BALA
ஜூலை 23, 2024 13:32

மின்சார கட்டணத்தில் மக்களின் குடலை உருவிவிட்டார்கள்.. திருடனுக்கு தேள் கொட்டியதுபோல ஓட்டு போட்ட பாவத்தை அனுபவித்துகொண்டுஇருக்கிறார்கள் மக்கள்..


Swaminathan L
ஜூலை 23, 2024 13:15

தற்போதைய ஸ்லாப் ரேட்டைக் கொண்டு மாதாமாதம் மின்சார பில் வழங்கினால் மின்வாரியம் இன்னும் பயங்கர நஷ்டத்தைச் சந்திக்கும். மாதாமாதம் மின்சார பில் வழங்க வேண்டுமானால், முதலில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே மாதம் 50 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். தற்போதைய ஸ்லாப் ரேட்டை மாற்றியமைத்து மாதம் 150 யூனிட்கள் வரை நுகர்வோருக்கு நல்ல மான்யம் தர வேண்டும். இரண்டு ஏசி வைத்திருக்கும் குடும்பங்கள் மாதாமாதம் 250-300 யூனிட்டுகளுக்கு அதிகமாக நுகர்வோர்களுக்கு எந்த மான்யமும் வழங்கக் கூடாது.


R S BALA
ஜூலை 23, 2024 13:36

அந்த வறுமைக்கோட்ட எப்படி கண்டுபிடிக்கிறது மகளிரியுரிமைத் தொகை பெற்ற பலர் பல லட்சத்துக்கு அதிபதி..


Kesavan
ஜூலை 23, 2024 12:25

எல்லாம் மதுரை எய்ம்ஸ் மாதிரி அப்படியே ஒரே பீலாவா தான் இருக்கும் எந்த காலத்திலும் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய பிஜேபி தயாராக இல்லை பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்திருந்தால் தமிழ்நாடு நாசமாக போயிருக்கும் நல்லவேளை மக்கள் பிஜேபி எங்க வைக்க வேண்டுமோ அங்க வைத்திருக்கிறார்கள்


ram
ஜூலை 23, 2024 13:23

மின்சார கட்டணம், காய்கறி விலை, பால், அத்தியாவசிய பொருட்கள் விலைகள் கட்டு கடங்காமல் ஏறிவிட்டது, அதை பேசாமல் எய்ம்ஸ் அது இது என்று திருட்டு திமுகவுக்கு முட்டு கொடுக்காதீர்கள், என்னமோ பிஜேபிகு வோட்டு போட்டமாதிரி. திருட்டு திமுக வந்த இரண்டு வருடங்களில் முப்பதாயிரம் கோடி ருபாய் கொள்ளை, மக்கள் பணத்தில் மரீனா சுடுகாட்டிற்கு தெண்ட செலவு, சினிமா கூத்தாடிக்கு மக்கள் பணத்தில் ரேஸ் கார் ரோடு, மக்கள் பணத்தில் எழுதாத பேணா சிலை,,கஞ்சா , கள்ள சாராயம், போதை பொருட்கள் விற்பனை ,ரௌடிகள் ராஜ்யம் எல்லாம் ஜோர் இந்த திருட்டு திமுக ஆட்சியில். இதை பத்தியும் கொஞ்சம் பேசுங்கள்.


ram
ஜூலை 23, 2024 13:27

திருட்டு திமுக தேர்தல் வாக்குறுதியில் மாத ரீடிங் எடுப்பேன் என்று பொய் சொன்னார்களே அது என்ன ஆச்சு இப்படியே முட்டு கொடுத்து கொடுத்து போய் சேர pogirgal.


panneer selvam
ஜூலை 23, 2024 14:22

How many AIIMS brought by DMK when they were in power at Central Government . Communist MP Venkatesan confirmed that project progress is good and in 18 months time first phase work will be completed .


Apposthalan samlin
ஜூலை 23, 2024 12:16

முழுக்க முழுக்க மத்திய அரசின் உதய் திட்டம் தான் காரணம் ஜெயலலிதா கையெழுத்து போட வில்லை சாமி உதய் திட்டத்தில் கையெழுத்து போட்டு தமிழ் நாடு மக்களின் vaythil அடித்தவர்


ram
ஜூலை 23, 2024 13:15

ஏன் திருட்டு திமுக இப்போது இந்த திட்டத்தில் இருந்து வெளியே வரலாமே, அப்படி ஒரு வேலை வந்தால் மின்சார கட்டணம் கட்ட வேண்டிய அவசியம் மக்களுக்கு இருக்காது, கரண்ட் வந்தால்தானே.


Maheesh
ஜூலை 23, 2024 12:13

இலவச மின்சாரத்தை உண்மையில் தேவையான ஏழ்மையில் உள்ள மக்களுக்கு மட்டும் கொடுத்தால் போதும். சொகுசு கார் ஏசி உள்ளவர்களுக்கு எதுக்கு இலவச மின்சாரம்? விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தையும் சற்று கட்டுப்படுத்த வேண்டும். அது போல மின்சார வாரியத்தில் உள்ள ஊழல்களை ஒழித்தாலே கடன் வாங்காமல் கட்டணத்தை உயர்த்தாமல் மின்சார வாரியம் சிறப்பாக செயல்படும். மின்சார வாரியத்தில் உள்ள அதிகமான சம்பளத்தையும் சற்று கவனிக்க வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூலை 23, 2024 12:02

எட்டு கோடி மக்களின் தலையில் எட்டு லட்சம் கோடி கடன். ஒவ்வொருவரது தலையிலும் ஒரு லட்சம் கடன். விரைவில் திவால்.


Palanisamy Sekar
ஜூலை 23, 2024 11:44

ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளில் ஸ்டாலினின் அரசு இதுவரை மூன்றரை லட்சம் கோடி அளவுக்கு கடன் வாங்கியுள்ளது. இதற்கான வட்டி மட்டும் பலகோடி ரூபாய் அளவுக்கு கட்டணும். இதற்கு பணமில்லாமல் தான் இப்படி குறுக்கு வழியில் மத்திய அரசாங்கத்தின் மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கின்றது. ஆனால் உண்மையில் மூன்றரை லட்சம் கோடிக்கு வட்டிக்கட்ட வக்கில்லாமல் இருக்கிறது மாநில திராவிட அரசு. இதற்கு இந்த 200 ரூபா உப்பிஸ் முட்டுக்கொடுத்து வருகின்றது. மாநிலம் திவாலாக நிச்சயம் சந்தர்ப்பம் இருக்கிறது. அப்போது கூட இந்த 200 க்கு முட்டுக்கொடுப்போர் திருந்தமாட்டார்கள்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை