உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மிதமான மழைக்கு வாய்ப்பு- விவசாயிகளுக்கு அறிவுரை

மிதமான மழைக்கு வாய்ப்பு- விவசாயிகளுக்கு அறிவுரை

பொள்ளாச்சி : கோவையில் வரும் மூன்று நாட்களுக்கு, மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது என்று, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.காலை நேர காற்றின் ஈரப்பதம் 90 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 70 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக காற்று மணிக்கு, 16-.22 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். பெரும்பாலும் தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும்.வரும் 3 நாட்களுக்கு, மேற்கு மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில், கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் மழையை கருத்தில் கொண்டு, மானாவாரி சோளத்துக்கு தழைச்சத்து உரமிடலாம். தற்போது நிலவும் வானிலையால், மானாவாரி நிலக்கடலையில் செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய் வர வாய்ப்புள்ளது.எனவே, விவசாயிகள் இதை கண்காணிக்க வேண்டும். தென்மேற்குப் பருவமழை துவங்கி இருப்பதால், மரம் நடவு செய்ய விரும்பும் விவசாயிகள், ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி