உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொடைக்கானல் பொதுப்பாதை, நீர் ஓடையை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார்

கொடைக்கானல் பொதுப்பாதை, நீர் ஓடையை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் நீர்வரத்து ஓடையை ஆக்கிரமித்து, பொதுப் பாதையை மறித்துள்ளதாக பாரதிய கிஷான் மாநில செயலாளர் அசோகன் தெரிவித்தார்.கொடைக்கானல் பேத்துப்பாறை ஓரவி அருவி அருகே நடிகர் பிரகாஷ்ராஜ் தோட்டம் உள்ளது. இதில் அனுமதியின்றி வீடு கட்டியது தொடர்பாக கொடைக்கானலில் 2023ல் ஆகஸ்ட்டில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் எழுப்பபட்டது. வருவாய்த் துறை, ஊராட்சி நிர்வாகம் விசாரணை செய்தது. பிரகாஷ்ராஜ் வீடு கட்டுவதற்கு முறையான அனுமதி பெறாதது தெரிய வந்ததையடுத்து ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது. இதனிடையே தற்போது பிரகாஷ்ராஜ், வீடு அருகே உள்ள வரங்காட்டு ஓடையை ஆக்கிரமித்து, சதுப்பு நிலத்தில் வீடு கட்டியுள்ளார் என்றும், விவசாயிகள் சென்று வரும் பொது பாதையில் சோலார் மின்வேலி அமைத்து மறித்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

பாதையை மறித்து சோலார் வேலி

பாரதிய கிஷான் சங்க மாநில செயலாளர் அசோகன் கூறியதாவது: நடிகர் பிரகாஷ்ராஜ் வீடு கட்டியுள்ள இடம் சதுப்பு நிலப்பகுதியாகும். இதில் 600 சதுர அடி அளவிற்கு மட்டுமே வீடு கட்ட முடியும். இருந்தபோதும் 2000 சதுர அடிக்கு மேல் அனுமதியின்றி வீடு கட்டி உள்ளார். வீடு அருகே உள்ள வரங்காட்டு ஓடையையும் ஆக்கிரமித்து உள்ளார். தோட்ட நுழைவுவாயில் பொதுப் பாதையை மறித்து அதில் சோலார் மின்வேலி அமைத்துள்ளார். இந்த பாதை, பேத்துப்பாறை வயல்வெளி, பாரதி அண்ணா நகர் இடையான பொதுப்பாதையாகும். இப்பாதையை பகலில் திறந்து விடுகின்றனர். இரவில் அடைக்கின்றனர். இதனால் விவசாயிகள் பயிர்களை பார்வையிட செல்ல முடியவில்லை. நிலங்களை வனவிலங்கு அழிக்காதவாறு பாதுகாவல் செய்யும் பணிக்கும் விவசாயிகள் செல்ல முடியவில்லை. சதுப்பு நிலத்தை இயந்திரங்கள் கொண்டு மட்டப்படுத்தியும் விதிமீறல் செய்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார்.

நோட்டீஸ் வழங்கல்

வில்பட்டி ஊராட்சித் தலைவர் பாக்யலட்சுமி கூறியதாவது : அனுமதியின்றி வீடு கட்டியது தொடர்பாக பிரகாஷ்ராஜூக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்களது தரப்பில் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக கூறி உள்ளனர். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் கூறியதாவது: பிரகாஷ்ராஜ் வீடு கட்டியது தொடர்பாக ஊராட்சி மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பொதுமக்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். மற்றபடி ஓடை ஆக்கிரமிப்பு, பொதுப்பாதை மறித்துள்ள புகார் குறித்து வருவாய்த்துறையினர் தான் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

அளவீடு செய்யப்படும்

தாசில்தார் கார்த்திகேயன் கூறியதாவது: நடிகர் பிரகாஷ்ராஜ் பேத்துப்பாறை பகுதியில் பொதுப்பாதையை மறித்துள்ளது, ஓடை ஆக்கிரமிப்பது குறித்து உள்ளாட்சி நிர்வாகத்தினர் புகார் கடிதம் அளிக்கும் பட்சத்தில் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்கப்படும். ஓடை ஆக்கிரமிப்பு வருவாய்த்துறை வசம் வரும்பட்சத்தில் நோட்டீஸ் வழங்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Shekar Prakash
ஜூன் 16, 2024 18:43

இங்கே தான் யோகி ஆதித்யாநாத் போன்ற ஒரு முதல்வர் தேவை. நம்ம விடியல் துண்டு சீட்டை பாத்து படிக்கவே தகராறு.


kumarkv
ஜூன் 16, 2024 16:37

Why notice, demolish it first and issue intimation


VENKATARAMAN DORAIRAJ
ஜூன் 16, 2024 15:13

A True Citizen....Who cares for Others against Government actions... Others Self


M Ramachandran
ஜூன் 16, 2024 11:19

பிரகாஷ் ராஜ்ஜின் உண்மையயை முகம். ஊருக்கு தாண்டி உபதேசம் ...


N Srinivasan
ஜூன் 16, 2024 11:11

தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சியில் தைரியம் இருக்கு என்று சொன்னான் இப்போ புரிகிறது யாருக்கு தைரியம் என்று. தைரியமாக அப்படி என்ன ஸ்டாலின் பண்ணார் காவேரியில் தண்ணீர் வாங்கினாரா கேரளாவிடம் அணை கட்டக்கூடாது என்று சொன்னாரா இதெல்லாம் இல்லை உன்னை போன்ற ஏமாற்று கின்ற மக்களுக்கு தைரியம் கொடுத்து இருக்கிறார்


Kasimani Baskaran
ஜூன் 16, 2024 11:03

பி. ராஜ் தீம்க்காவின் சக்தி வாய்ந்த ஊதுகுழல். ஆகவே கழக அரசு ஆட்சியில் இருக்கும்வரை ஒன்றும் நடக்காது.


கௌதம்
ஜூன் 16, 2024 09:47

அடடே... யோக்கியவான்... ஏன் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துறீங்க


மாயவரத்தான்
ஜூன் 16, 2024 09:43

இப்போது தெரிகிறதா பிரகாஷ் ராஜ் ஏன் பாஜகவை எதிர்த்து திமுகவை புகழ்ந்து பேசுகிறார் என்று? பக்கத்தில் அமர்ந்து சேகர்பாபு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றாக ஆட்சி செய்கிறார் என்று சொல்லுங்கள் என எடுத்துக் கொடுக்க அதை அப்படியே ஒப்பித்தார் பிரகாஷ் ராஜ் என்ன கேவலம் பாருங்கள். எப்போதும் சினிமா நடிகர்களும் திராவிட கூட்டமும் கூட்டுக் களவாணிகள்தான்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 16, 2024 09:38

ஆனா மறத்தமிழன் அண்ணாமலையை கர்நாடகக்காரன் என்று கூறும் மூடர்கூட்டம் நிறைந்த மாநிலம் தமிழகம் அல்லவா


kannan sundaresan
ஜூன் 16, 2024 09:29

இதுபோன்ற கேவலமான ஆளுங்கதான் அடுத்தவங்களை விமர்சிக்கிறான்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை