உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துாய்மை பணியாளர் நலனில் அலட்சியம் உள்ளாட்சி அதிகாரிகள் மீது புகார்

துாய்மை பணியாளர் நலனில் அலட்சியம் உள்ளாட்சி அதிகாரிகள் மீது புகார்

பொள்ளாச்சி:உள்ளாட்சி அமைப்புகளில் துாய்மை பணியாளர்களுக்கு முறையாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முழு அளவிலான மருத்துவ பரிசோதனை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல, மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரிக்கும் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இப்பணிகளில் ஈடுபடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி, தொடர் சிகிச்சை தேவைப்படும் பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்ட செலவில் தேவையான சிகிச்சை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், துாய்மை பணியாளர்களுக்கு முறையாக, மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவதில்லை என, புகார் எழுந்துள்ளது. இதற்கு, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக, துாய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில், துாய்மை பணியாளர்கள் எக்காரணம் கொண்டும் சீருடை அணியாமலும், கைகளுக்கு கிளவுஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமலும், துாய்மை பணிகளை செய்யக் கூடாது.ஆனால், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியே துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். திட்டங்களை செயல்படுத்துவதில், அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை.குறிப்பிட்ட கால இடைவெளியில், துாய்மை பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், ரத்த பரிசோதனை, காய்ச்சல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், சமீபகாலமாக, துாய்மை பணியாளர்கள் எவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை