உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஞ்சா சாக்லேட் பறிமுதல்; பீடா கடைக்காரர் கைது

கஞ்சா சாக்லேட் பறிமுதல்; பீடா கடைக்காரர் கைது

போத்தனுார் : பீடா கடைக்காரரிடமிருந்து ஐந்து கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர், மதுக்கரை குவாரி ஆபீஸ் பஸ் ஸ்டாப் அருகே, பீடா கடை நடத்தி வருபவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த வேத் பிரகாஷ்சோங்கர், 38. இவர் தனது வீட்டில் விற்பனைக்காக, கஞ்சா சாக்லேட் பதுக்கி வைத்திருப்பதாக, மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மதுக்கரை மார்க்கெட், விறகு கடை பஸ் ஸ்டாப் அருகேயுள்ள, அவரது வீட்டிற்கு சென்ற போலீசார், கழிவறையில் கஞ்சா சாக்லேட் பாக்கெட்கள் இருப்பதை கண்டனர். ஐந்து கிலோ எடையுள்ள சாக்லேட்களை பறிமுதல் செய்த போலீசார், வேத் பிரகாஷ்சோங்கரை கைது செய்து விசாரித்தனர். உத்தரபிரதேசத்திலிருந்து கஞ்சா சாக்லேட்களை வாங்கி வந்து விற்பனை செய்வது தெரிந்தது. மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட வேத் பிரகாஷ்சோங்கர், சிறையிலடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி