உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆவணங்களின்றி கொண்டு வந்த பணம் பறிமுதல்

ஆவணங்களின்றி கொண்டு வந்த பணம் பறிமுதல்

- நிருபர் குழு -பொள்ளாச்சி அருகே கோபாலபுரத்தில், நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக வாகனத்தில் வந்த கோழிக்கோட்டை சேர்ந்த நவுசாத் அலி, முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 4 லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அதே பகுதியில், நிலையான கண்காணிப்பு குழுவினர், வாகனத்தை சோதனை செய்த போது, அவ்வழியாக வந்த வாகனத்தில், கோழிக்கோட்டை சேர்ந்த நிகில், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 93 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.நிலையான கண்காணிப்பு குழுவினர், கேரளா மாநிலத்தில் இருந்து வாகனத்தில் வந்த மணப்புரத்தை சேர்ந்த ரஷீத், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, ஒரு லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.மேலும், வாகனத்தில் மலப்புரத்தை சேர்ந்த சலாவுதீன், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த ஒரு லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பொள்ளாச்சி கோபாலபுரம் வழியாக, முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 8 லட்சத்து, 18 ஆயிரம் ரூபாயை நேற்று அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.* உடுமலை சட்டசபை தொகுதி, நிலையான கண்காணிப்பு குழுவினர், உடுமலை - பொள்ளாச்சி ரோடு, திப்பம்பட்டி கல்லுாரி அருகே வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, கேரளா மாநிலம், பாலக்காடு, நல்லாம்பள்ளியை சேர்ந்த தேவி, ஸ்கூட்டரில், தேர்தல் நடத்தை விதி மீறி, 82,990 ரூபாய் கொண்டு வந்ததை பறிமுதல் செய்து, உடுமலை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.நிலை கண்காணிப்பு குழுவினர், தாராபுரம் - பொள்ளாச்சி ரோடு, பத்ரகாளிபுதுார் பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தாந்தோணியை சேர்ந்த செந்தில்ராஜ், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த, 52,500 ரூபாயை பறிமுதல் செய்து, தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை