உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆக்கிரமிப்பு ஓட்டலுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

ஆக்கிரமிப்பு ஓட்டலுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

கோவை, : கோவையில் திறந்த வெளி இட ஒதுக்கீடு இடத்தை ஆக்கிரமித்து, ஓட்டல் நடத்தி வருவோருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், கணபதி கிராமத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நகர ஊரமைப்புத் துறை விதிமுறைகளின் படி, திறந்த வெளி பொது ஒதுக்கீட்டு இடம் ஒதுக்கப்பட்டு, மாநகராட்சிக்கு தானமாக ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இதில், 2 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து, ஓட்டல் கட்டப்பட்டு இருக்கிறது.இங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, இடத்தை மீட்கக்கோரி, தனியார் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தினர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆவணங்களை ஆய்வு செய்த கோர்ட், 12 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, கடந்த பிப்., மாதம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில், கோவை மாநகராட்சியில் இருந்து, ஓட்டல் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில், 'ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டடத்தை, இரு நாட்களுக்குள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் மாநகராட்சியால் அகற்றப்பட்டு, அதற்குரிய செலவினம் தங்களிடம் இருந்து வசூலிக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை