உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அன்சாரி வீதியில் அப்பப்பா என்னவொரு வாகன நெரிசல்!

அன்சாரி வீதியில் அப்பப்பா என்னவொரு வாகன நெரிசல்!

கோவை;ராம்நகர் அன்சாரி வீதி கார்னரில், போக்கு வரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவதால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.நஞ்சப்பா ரோட்டில் இருந்து, ராம்நகருக்குள் வரும் பெரும்பாலான வாகனங்கள் சென்குப்தாவீதி மற்றும் அன்சாரி வீதி வழியாக செல்கின்றன. இதில் அன்சாரி வீதி குறுகலாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகம்.இங்குள்ள ஓட்டல்களுக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள், அன்சாரி வீதியின் இரு புறங்களிலும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.வேன் மற்றும் ஆட்டோக்களும் நிறுத்தப்படுகின்றன. இதனால் இந்த வழியில், வாகனங்கள் செல்லமுடியாமல் தினமும் நெரிசல் ஏற்படுகிறது.அன்சாரி வீதி கார்னரில், வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பதோடு, அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை