உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அணையின் நீர்பிடிப்பில் 4 மி.மீ., மழை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 41 அடி

அணையின் நீர்பிடிப்பில் 4 மி.மீ., மழை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 41 அடி

கோவை:சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 4 மி.மீ., மழை பதிவாகியுள்ளது; நீர் மட்டம், 41.69 அடியாக உயர்ந்துள்ளது.கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக இரவில் மழைப்பொழிவு காணப்படுகிறது. இதன் காரணமாக, குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவாகியிருக்கிறது.அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் குறைந்தளவு மழைப்பொழிவே இருந்து வருகிறது. இதன் காரணமாக, அணையின் நீர்மட்டம், தொடர்ந்து, 41 அடிகளில் இருந்து வருகிறது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அடிவாரத்தில் மழையில்லை. அணைப்பகுதியில், 4 மி.மீ., மழைப்பொழிவு பதிவானது. அணையின் நீர்மட்டம், 41.69 அடியாக இருந்தது. அணையில் இருந்து 10.732 கோடி லிட்டர் நீர், குடிநீர் தேவைக்காக எடுக்கப்பட்டது.அணையின் நீர்மட்டம், குறைந்துள்ளதால் பழையபடி, வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக, மதகு அளவு, 5 செ.மீ., திறக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில், தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என, வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வரும் நாட்களில், மழைப்பொழிவால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை