உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேதமடையும் சர்வீஸ் ரோடு; சீரமைக்க வலியுறுத்தல்

சேதமடையும் சர்வீஸ் ரோடு; சீரமைக்க வலியுறுத்தல்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சர்வீஸ் ரோடு சேதம் அடைய துவங்கியுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு வழியாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த ரோட்டின் இரண்டு பகுதியிலும் ஏராளமான கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. இந்த ரோட்டில் மேம்பாலம் துவங்கும் இடம் மற்றும் முடியும் இடத்தின் அருகே ரோடு சேதம் அடைந்துள்ளது.கல்லாங்கட்டுப்புதூர், தனியார் பெட்ரோல் பங்க் அருகே, கிணத்துக்கடவு செக்போஸ்ட்டில் சொக்கனூர் இணைப்பு ரோடு தடுப்புகள் அருகே ரோடு பெரும் சேதம் அடைந்துள்ளது. டி.இ.எல்.சி., பெண்கள் பள்ளி அருகேயும் ரோடு ஆங்காங்கே பள்ளமாக உள்ளது.கிணத்துக்கடவு செக்போஸ்ட் வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இங்கு, கடந்த வாரம் பைக்கில் சென்றோர் கீழே விழுந்து காயமடைந்தனர்.இதே போன்று, கல்லாங்காட்டுபுதூர் ரோட்டில் உள்ள குழியில் மழைநீர் தேங்கி நிற்பதால் பைக்கில் வருபவர்கள், குழியின் ஆழம் தெரியாமல் கீழே விழுகின்றனர்.எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோட்டை ஆய்வு செய்து, விரைவில் சீரமைக்க வேண்டும். ரோட்டோரத்தில் தேங்கும் மழைநீரை அகற்றி, மழைநீர் தேங்காத படி ரோட்டை சீரமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்