மேலும் செய்திகள்
டாக்ஸி டிரைவரை தாக்கிய இருவர் சிறையிலடைப்பு
4 minutes ago
இன்றைய நிகழ்ச்சி கள் :கோவை
4 minutes ago
மேட்டுப்பாளையம்- மேட்டுப்பாளையம் நெல்லிமலை அருகே குட்டையில் மூழ்கி காட்டு யானை உயிரிழந்தது.மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த நெல்லிமலை வனப்பகுதியில், யானை, மான், காட்டு எருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.இந்நிலையில் நேற்று, மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் நெல்லிமலை வனப்பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனர்.அப்போது, அப்பகுதியில் உள்ள பன்றி குட்டையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஊசி கொம்பன் என்று மக்களால் அழைக்கப்படும் ஆண் யானை குட்டையில் மூழ்கி உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட வனஅலுவலர் ஜெயராஜிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையின் உடலை கிரேன் இயந்திரம் உதவியுடன் குட்டையில் இருந்து மீட்டனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறுகையில், 'ஆண் யானை சேற்றில் சிக்கி உயிரிழந்ததா அல்லது வேறு ஏதாவது காரணத்தினால் இறந்ததா என்பது குறித்து உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே தெரியவரும்,' என்றனர். யானை இறந்தது வனவிலங்கு ஆர்வலர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4 minutes ago
4 minutes ago