உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சிகளில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

ஊராட்சிகளில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

உடுமலை: உடுமலை ஒன்றிய கிராம ஊராட்சிகளில், டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. குடியிருப்புகளில் கொசுப்புழு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மழைநீர் தேங்காத வகையில் கண்காணிப்பதற்கும் ஊரக வளர்ச்சித்துறை வழிமுறை வழங்கியுள்ளது.இதன் அடிப்படையில், உடுமலை ஒன்றிய கிராம ஊராட்சிகளில் ஒன்றிய அலுவலர்கள் தலைமையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.மேலும் நோய்த்தடுப்பு நடவடிக்கையாக, டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த கொசுப்புழு ஒழிப்பு குழுவினர், சுகாதாரத்துறையினர் குழுவாக குடியிருப்புகளில் ஆய்வு நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !