உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முனீஸ்வரன் சுவாமி கோவில் விழா பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம்

முனீஸ்வரன் சுவாமி கோவில் விழா பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம்

வால்பாறை ;முனீஸ்வரன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர்.வால்பாறை அடுத்துள்ளது சோலையாறுஎஸ்டேட். இங்குள்ள முனீஸ்வரன் கோவிலின், 31ம் ஆண்டு திருவிழா கடந்த மாதம், 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில், நேற்று முன் தினம் சோலையாறு எஸ்டேட் 3ம் பிரிவு மாரியம்மன் கோவிலில், முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.நேற்று காலை, 6:00 மணிக்கு முனீஸ்வரன் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. காலை, 10:00 மணிக்கு பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை