உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர் வாசகரின் ரோடு புகார் மாநகராட்சியால் கிடைத்தது தார்!

தினமலர் வாசகரின் ரோடு புகார் மாநகராட்சியால் கிடைத்தது தார்!

கோவை;'தினமலர்' நாளிதழ் வாசகர் அளித்த புகார் மீது, கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நேற்று தார் ரோடு போட்டுக் கொடுத்தது.நமது நாளிதழ் கோவை மெட்ரோ இணைப்பில், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை, 'இன்பாக்ஸ்' என்ற பகுதி பிரசுரமாகிறது. அதில், அந்தந்த பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்னைகள் தொடர்பாக, வாசகர்கள் புகைப்படத்துடன் அனுப்பும் புகார்கள் பிரசுரிக்கப்படுகின்றன.சேரன் மாநகரை சேர்ந்த வாசகர் ஜெயராமன் என்பவர் அனுப்பிய புகாரில், 'சேரன் மாநகர், விளாங்குறிச்சி, 22வது வார்டில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது.குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சாலை அமைக்கவில்லை. ஜல்லிக்கற்கள் மட்டும் பரப்பியிருப்பதால், நடக்க முடியவில்லை; வாகனங்களை இயக்க முடியவில்லை' என, குறிப்பிட்டு இருந்தார்.இத்தகவல், 'புது ரோடு நடுவுல கொஞ்சம் தாரை காணோம்' என்கிற தலைப்பில், ஏப்., 30ம் தேதி பிரசுரமாகியது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கவனத்துக்கு சென்றதும், விடுபட்ட பகுதியில் தார் ரோடு போடுவதற்கு, பொறியியல் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து, காம்பேக்ட் இயந்திரங்களால் ஜல்லிக்கற்கள் அமுக்கப்பட்டு, நேற்று தார் சாலை போடப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை