உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

கோவை:பேங்க் ஆப் மகாராஷ்டிரா அவிநாசி ரோடு கிளையில், வாடிக்கையாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பொது மேலாளர் ராஜேஷ் குமார், வாடிக்கையாளர்களுக்கு கடன் அனுமதி கடிதம் வழங்கினார்.பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் அவிநாசி ரோடு கிளை, கோவை மருத்துவக் கல்லுாரி எதிரில் உள்ள, டாக்டர் ஜகன்நாதன் நகர் பி.சி.டி., தரைதளத்தில் திறக்கப்பட்டது.திறப்பு விழாவில், பேங்க் ஆப் மகாராஷ்டிரா தலைமை அலுவலக மனிதவள மேம்பாட்டுத்துறை பொது மேலாளர் ராஜேஷ்குமார், திருப்பூர் சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இதையடுத்து நடந்த, வாடிக்கையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன், கல்விக் கடன், வாகனக் கடன், எம்.எஸ்.எம்.இ., கடன் வழங்கப்பட்டது. வங்கியின் சேவைகள் குறித்து விளக்கப்பட்டது.நிகழ்ச்சியில், கோவை மண்டல மேலாளர் ராமசேகரா, கிளை மேலாளர் சாய் பவன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை