உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறப்பு பஸ் இயக்கத்தில் குளறுபடி சிரமத்தில் பயணியர் திண்டாட்டம்

சிறப்பு பஸ் இயக்கத்தில் குளறுபடி சிரமத்தில் பயணியர் திண்டாட்டம்

- நமது நிருபர் -ஒவ்வொரு வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வெளியூர் செல்வோர் வசதிக்காக சிறப்பு பஸ்களை போக்குவரத்து கழகம் இயக்குகிறது. உள்ளூரில் இயங்கும் சில பஸ்கள், பயணிகள் நலன் கருதி வெளியூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பூரில் இருந்து பொள்ளாச்சிக்கு குறைந்தளவே பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் காலை, 9:00 மணி முதல், 10:00 மணி வரை, பொள்ளாச்சிக்கு அரசு பஸ் மத்திய பஸ் ஸ்டாண்ட்டில் இல்லை. ரேக்கில் நின்று கொண்டிருந்த ஒரு பஸ்சில், 90க்கு மேல் பயணியர் ஏறியிருந்தனர்.அடுத்த சில நிமிடங்களில் தனியார் பஸ் ஒன்று வர, அதில் பயணிகள் முண்டியடித்து ஏறினர். இருப்பினும், பயணிகள் பலர் காத்திருக்க, அடுத்ததாக வந்த அரசு பஸ்சில், 80 பேர் முண்டியடித்து ஏறினர்.பயணிகள் சிலர் கூறுகையில், 'சிறப்பு பஸ்களை பஸ் ஸ்டாண்ட்டுக்குள் கொண்டு வந்து நேரத்துக்கு இயக்கத்தை துவங்காமல், வெளியே நிறுத்தி வைத்து, தனியார் பஸ்களுக்கு சாதகமாக, போக்குவரத்து அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி