உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி.மு.க., வாக்குறுதிகளை நம்பாதீர்: ஜி.கே.வாசன் கோவையில் பிரசாரம்

தி.மு.க., வாக்குறுதிகளை நம்பாதீர்: ஜி.கே.வாசன் கோவையில் பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : ''தி.மு.க.,வின் பொய் பிரசாரத்தையும், வாக்குறுதிகளையும் இனியும் நம்ப வேண்டாம்,'' என, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.கோவை லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் கோவை இடையர்பாளையம் பிரிவில் நேற்று பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது: பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை கோவை தொகுதியை நன்கு அறிந்தவர். இந்த தொகுதி மக்களுக்கு என்ன தேவை என்பது அவருக்கு தெரியும். தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்து மக்களில் அடிப்படை தேவைகளை அறிந்து வைத்துள்ளார். அதனால் அவரை வெற்றி செய்ய வேண்டிய பொறுப்பு கோவை தொகுதி மக்களுக்கு உள்ளது. அதன் மூலம் சிறந்த எம்.பி.,யை தேர்ந்தெடுத்த பெருமை கோவை மக்களுக்கு சேரும். மூன்றாவது முறையாக மீண்டும் மோடி பிரதமராக வருவது மிக அவசர தேவையாகும். இன்றைய தமிழக வளர்ச்சிக்கு மோடி அரசு தான் காரணம்.தி.மு.க., அரசு விலைவாசி உயர்வு, மின்சார கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி உயர்வு என, மக்கள் தலையில் மிகப்பெரிய சுமையை ஏற்றி வைத்துள்ளது. மக்கள் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் அரசாக தி.மு.க., உள்ளது. காலையில் குடும்ப தலைவிக்கு, 1000 ரூபாய் உதவி தொகை கொடுத்து விட்டு, மாலையில் குடும்பத் தலைவரிடமிருந்து டாஸ்மாக் வழியாக அதை தி.மு.க., பிடுங்கி கொள்கிறது. தி.மு.க., டாஸ்மாக் வியாபார அரசாக மாறி இருக்கிறது. இனியும் பெண்கள் தி.மு.க.,வின் பொய் பிரசாரத்தையும், வாக்குறுதிகளையும் நம்ப வேண்டாம்.இவ்வாறு, அவர் பேசினார். பொள்ளாச்சி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜனை ஆதரித்து, மலுமிச்சம்பட்டியில் வாசன் பேசியதாவது:கொங்கு மண்டலத்தில் பெரும் வெற்றியில், கோவை, பொள்ளாச்சி முதல் வரிசையில் உள்ளது. பரம்பிக்குளம்- - ஆழியாறு, நல்லாறு, பொள்ளாச்சி வழியே சென்னைக்கு ரயில் உட்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற வசந்தராஜன் வெற்றி பெறவேண்டியது அவசியம், இத்தேர்தலில் நீங்கள் போடும் ஓட்டு, 2026-ல் தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப போடும் ஓட்டாகும். நீங்கள் போடும் ஓட்டு நாட்டின் வளர்ச்சிக்கானது. இரு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம், உலகளவில் இரண்டாமிடத்திற்கு உயரும். உங்களுக்காக உழைக்க தாமரைக்கு ஓட்டு போடுங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Pundai mavan
ஏப் 09, 2024 08:35

பெட்ரோல் டீசல் விலையை ஏத்தி வைத்தால்தான் மற்ற பொருட்கள் விலை அதிகம் ஆகுது


அப்புச்சாமி
ஏப் 08, 2024 10:03

நாங்க குடுத்த பாஞ்சி லட்சம், கருப்புபணம், ரெண்டு கோடி வேலை பொன்ற அக்மார்க் வாக்குறுதிகளை மட்டுமே நம்புங்க.


rameshkumar natarajan
ஏப் 08, 2024 09:40

Whether he will be able to con in an election and win a councellor seat?


VENKATASUBRAMANIAN
ஏப் 08, 2024 07:41

காங்கிரஸ் திமுக வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தால் பாகிஸ்தான் இலங்கை நிலமை இங்கும் வந்துவிடும் வறுமையின் உச்சத்திற்கு சென்று விடுவோம்


Tamil Inban
ஏப் 08, 2024 07:39

முதலில் இவரை நம்பாதீர்கள் மக்களே


முருகன்
ஏப் 08, 2024 05:45

உங்களுக்கு ராஜ்ய சபா சீட் கொடுத்த அதிமுக விற்கு துரோகம் இழந்து விட்டு அடுத்த கட்சியை பற்றி பேச எப்படி முடிகிறது


Kasimani Baskaran
ஏப் 08, 2024 05:40

நீட்டை நீக்குவது - நீட் என்ன வருடத்தில் எல்லா நாட்களிலுமா நடக்கிறது ஆகவே வருடத்துக்கு ஒரு நாள் மட்டும் நீக்கவில்லை என்றால் குடியா முழுகிவிடும்? டாஸ்மாக் கூட இரவில் இயங்குவதில்லையே - அந்த வாக்குறுதி கூட பாதி நிறைவேற்றி விட்டதாக எடுத்துக்கொள்ள வேண்டும் - ஏனென்றால் ௨௪ மணி நேரமும் டாஸ்மாக் திறந்திருந்தால் நிலமை கைமீறிப்போயிருக்கும் இந்த லாஜிக்குக்பெயர் திராவிட மாடல் லாஜிக் இதற்கு நிறுவனம் பொறுப்பல்ல


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி