புற்றுநோயை கண்டு பயப்பட வேண்டாம்!
'புற்றுநோயை குணப்படுத்த முடியாது என்ற நிலை, தற்போதைய நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களால் மாறியுள்ளது,' என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை கதிர்வீச்சு புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:போதிய விழிப்புணர்வு இல்லாததால், புற்றுநோயை குணப்படுத்த முடியாது என மக்கள் கருதுகின்றனர். பாதிப்பு இருப்பது தெரிந்தால், உடல் மற்றும் மன ரீதியாக சிரமப்படுகின்றனர். ஆனால், 50 சதவீத புற்றுநோய் பாதிப்புகளை தற்போதுள்ள அதிநவீன சிகிச்சை முறைகளால், முற்றிலுமாக குணப்படுத்தலாம்.இந்நோய்க்கான சிகிச்சையில் முதன்மையானது, விரைவில் நோயை கண்டுபிடிப்பது, நோய் வராமல் தடுக்கும் தற்காப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இருப்பதே ஆகும். பெண்கள் மேமோகிராம் பரிசோதனையை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் வாயிலாக மார்பக புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்று குணமடையலாம்.எடை குறைதல், இருமல், சளி, உடல் கழிவுகள் வெளியேறும்போது ரத்தம் வருதல், வாயில் மூன்று அல்லது நான்கு வாரத்துக்கும் மேலாக ஆறாத புண்கள், பசியின்மை போன்றவை புற்றுநோய்க்கான அறிகுறிகளாகும்.உடலின் எந்த பகுதியில் கட்டி ஏற்பட்டாலும் அதை அலட்சியப்படுத்தாமல், மருத்துவமனையை அணுகி உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் அது புற்று நோய் கட்டியாக கூட இருக்கலாம்.கே.எம்.சி.எச்.,ல் புற்றுநோய்க்கு ஒருங்கிணைந்த சிகிச்சை முறை கடைபிடிக்கப்படுகிறது. இதற்கென தனி பிரிவு செயல்படுகிறது. இதில், அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சை நிபுணர்கள் குழு உள்ளது. நோயாளிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தன்மைக்கேற்ப சிகிச்சை முறையை இக்குழு தேர்வு செய்து சிகிச்சை அளிக்கிறது. சிகிச்சைக்கு தேவையான அதிநவீன கருவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இங்குள்ளது.விவரங்களுக்கு, 74188 87411என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.