உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தாலுகா அலுவலக வளாகத்தில் குழாய் கசிவால் குடிநீர் வீண்

தாலுகா அலுவலக வளாகத்தில் குழாய் கசிவால் குடிநீர் வீண்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, தாலுகா அலுவலக வளாகத்தின் நுழைவுவாயில் அருகே உள்ள இடத்தில், குழாயில் கசிவு ஏற்பட்டு அதிக அளவு நீர் வெளியேறி வருகிறது.இந்த கசிவு நீண்ட காலமாக சரி செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் குடிநீர் வீணாகிறது. தாலுகா அலுவலகத்தில் இருந்து ஒன்றிய அலுவலகம் செல்லும் மண் பாதையில் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகிறது. வாரம் ஒரு முறை இந்த இடத்தில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. எனவே, தாலுகா அலுவலக அதிகாரிகள், குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை