டிரைவர் - மாணவர் மோதல் நடுரோட்டில் பரபரப்பு
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, பஸ்சுக்கு வழிவிடாமல் கார் சென்ற நிலையில், காரில் வந்தவருக்கும், பஸ் டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஆனைமலை அருகே, ஒடையகுளத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணியரை அழைத்துக்கொண்டு அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. பஸ்க்கு முன்பாக, வழிவிடாமல் கார் சென்றது.ஜமீன் ஊத்துக்குளி அருகே காரை மறித்து, பஸ்சை நிறுத்திய டிரைவர், ஏன் இப்படி கார் ஓட்டுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.அப்போது, காரில் வந்த கல்லுாரி மாணவர்கள் மூன்று பேர், டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.வாக்குவாதம் முற்றியதுடன், கை கலப்பாக மாறியதையடுத்து, அவ்வழியாக வந்த அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த மேற்கு போலீசார், இருதரப்பிடம் பேச்சு நடத்தினர். இருவரும் சமாதானமாக சென்றதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.