மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
6 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
6 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
6 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
6 hour(s) ago
அன்னூர்:அச்சம்பாளையத்தில் குடிநீர் பிரச்னையை கண்டித்து, துவங்கிய போராட்டம் அதிகாரிகள் வாக்குறுதியால் வாபஸ் பெறப்பட்டது. காரேகவுண்டன் பாளையம் ஊராட்சி, அச்சம்பாளையம், பெரியார் நகரில், 100 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கடந்த 10 நாட்களாக ஆற்று நீரும் வரவில்லை. போர்வெல் நீரும் வரவில்லை. இது குறித்து ஊராட்சி தலைவரிடம் பொதுமக்கள் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து மே 2ம் தேதி அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக, அச்சம்பாளையம் இளைஞர் மன்ற செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் அறிவித்தனர்.நேற்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்தனர். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். மின் மோட்டார் பழுதாகி உள்ளது. உடனடியாக பழுது சரி செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். பொதுமக்கள் முன்னிலையில் பழுதான போர்வெல்லுக்கு குழாய்கள் ஏற்றி அனுப்பப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago