உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீ விபத்து ஏற்படாதவாறு முன்பே எச்சரிக்க உத்தரவு

தீ விபத்து ஏற்படாதவாறு முன்பே எச்சரிக்க உத்தரவு

கோவை;தீத்தடுப்பு மற்றும் தொழில் பாதுகாப்பு குழு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா முன்னிலை வகித்தார்.வெப்ப அலை காரணமாக தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில் தீத்தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை தொழிற்சாலை பாதுகாப்பு அலுவலர்கள், தீயணைப்பு அலுவலர்கள் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும்.மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்க, மாதிரி ஒத்திகை பயிற்சி நடத்த வேண்டும். வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் குவாரிகளில் வெடிவிபத்து ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கலெக்டர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ