| ADDED : ஏப் 11, 2024 12:27 AM
கோவை : பீளமேடு, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியின் அழகியல் மற்றும் ஆரோக்கியத்துறை, நேச்சுரல்ஸ் அழகுப் பயிற்சி நிலையம் சார்பில், மேம்பட்ட முக ஒப்பனை மற்றும் அதிநவீன சிகை அலங்காரம் குறித்த, ஒருநாள் பயிலரங்கு நடத்தப்பட்டது.இதில், நேச்சுரல்ஸ் பியூட்டி அகாடமி முக ஒப்பனை பயிற்சியாளர் கெவின், அதிநவீன சிகை அலங்கார நிபுணர் சுகந்தி, நேச்சுரல்ஸ் பியூட்டி அகாடமியின் வணிகத் தலைவர் குஞ்சன் கவுர் பயிற்சி வழங்கினர்.பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி செயலாளர் யசோதா பேசுகையில், ''மிக வேகமாக அதிநவீனத்துடன் வளர்ந்து வரும் அழகுத்துறையில் சாதிக்க, மூன்று வருட பி.எஸ்சி., பியூட்டி அண்ட் வெல்னஸ் என்ற, பட்டப்படிப்பு மிகவும் அவசியம். இதில், படிக்கும் போதே மாணவிகள் வருமானம் ஈட்டுவதுடன், படித்தவுடன் முன்னணி நிறுவனங்களில் வேலையும் கிடைக்கிறது,'' என்றார்.கல்லுாரியில் குறுகிய கால, அழகு மற்றும் சிகை அலங்கார, சான்றிதழ் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, 90921 24683, 76670 50279 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, கல்லுாரி முதல்வர் மீனா தெரிவித்தார்.