உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது

மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது

கோவை: ஆண்டுதோறும் தொடர்ச்சியாக உயர்த்தப்படும் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.அந்த அமைப்பின் பொதுசெயலாளர் ஜெயபால் கூறியதாவது:கடந்த 2022, 23, 24 என ஆண்டுதோறும் உயர்த்தி வரும் மின் கட்டணம் மற்றும் இதர துணைக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். நடப்பாண்டு மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது.தொழில் வரி, வணிக கட்டடங்கள் உட்பட வீட்டு வரி, பத்திரப் பதிவுக்கட்டணம், தொழில் செய்ய பல்வேறு உரிமக் கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றைக் குறைக்க வேண்டும்.ஏற்றுமதி -- இறக்குமதிக் கொள்கைகளை, எம்.எஸ்.எம்.இ., தொழில்துறையினர் பாதிக்காத வண்ணம், மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும்.மத்திய அரசுடன் இணைந்து, வரிப் பங்கீடு செய்து கொள்ளும் மாநில அரசு, தமிழக தொழில்துறையின் எதிர்கால நலன் கருதி, பருத்தி இறக்குமதி வரி 11 சதவீதம், க்யூ.சி.ஓ., பி.ஐ.எஸ்., சட்டங்களை ரத்து செய்யவும், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் இயற்றவும் வலியுறுத்த வேண்டும்.குறு மற்றும் சிறு தொழில்முனைவோர்க்கு, பட்ஜெட்டில் தனி நிதி ஒதுக்கீடுசெய்ய வேண்டும். முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Balachander Subbian
மார் 09, 2025 18:04

இலவசங்களால் ஏற்பட்ட சுமை. இலவசங்கள் அனைத்தையும் ரத்து செய்வதுடன் அதியாவசிய தேவைகளுக்கு சலுகை கட்டணம் நிர்ணயம் செய்தால் மக்களுக்கு வரி சுமை குறைவதுடன் அரசுக்கும் நிதிச்சுமை மற்றும் கடன் சுமை குறைய வாய்ப்பு உண்டாகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை